Connect with us

பொழுதுபோக்கு

முடிவுக்கு வரும் 3 சீரியல்கள், நியூ என்ட்ரி வெயிட்டிங்; மதியம் முதல் இரவு வரை சீரியல் மயம் தான்: ஜீ தமிழ் அப்டேட்

Published

on

zee tamil ninaithale

Loading

முடிவுக்கு வரும் 3 சீரியல்கள், நியூ என்ட்ரி வெயிட்டிங்; மதியம் முதல் இரவு வரை சீரியல் மயம் தான்: ஜீ தமிழ் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வரும் ஜீதமிழ், சேனலில் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என பல நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றன.மேலும் அவ்வப்போது புதிய சீரியல்கள், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் என புதுப்புது சீரியல்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ஜீ தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் பாரிஜாதம்.ஆலியா மானசா நாயகியாக நடித்து வரும் இந்த பாரிஜாதம் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலை தொடர்ந்து அடுத்து திருமாங்கல்யம் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.மேலும் அண்ணாமலை குடும்பம் என்ற பெயரில் புதிய சீரியல் ஒன்றும் உருவாகி வருகிறது. இதன் காரணமாக மதியம், மாலை மற்றும் இரவு என மூன்று வேளையிலும் தலா ஒவ்வொரு சீரியல் என மொத்தம் 3 சீரியல்கள் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், மதியத்தில் பௌசி, அசோக் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் மௌனம் பேசியதே சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக சொல்லப்படுகிறது.மேலும், மாலை 6 மணிக்கு சுகேஷ், அஞ்சனா ஸ்ரீநிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாரி சீரியல் முடிவுக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  மாரி சீரியலை தொடர்ந்து இரவு 10:30 மணிக்கு ஆனந்த் செல்வன், ஸ்வாதி நடிப்பில் அமானுஷ்யங்கள் நிறைந்த சீரியலாக ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் தொடரும் முடிவுக்கு வர உள்ளதாக சொல்லப்படுகிறது.இந்த மூன்று சீரியலுக்கும் மாற்றாக அடுத்தடுத்து புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலே குறிப்பிட்ட இந்த சீரியல்கள் முடிவுக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் இடையில் முடிவுக்கு வந்தபோது், ரசிகர்கள் மீண்டும் ஒளிபரப்பை தொடங்க வேண்டும் என்று சொன்னதால் மீண்டும் ஒளிபரப்பானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன