இலங்கை
வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி பணம் கொள்ளை; நால்வர் கைது
வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி பணம் கொள்ளை; நால்வர் கைது
மோசடியான முறையில் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 50 இலட்சத்து 69 ஆயிரத்து 610 ரூபா பணத்தை திருடிய நான்கு சந்தேக நபர்கள் கைதாகையுள்ளனர்.
சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் தெஹிதெனிய மற்றும் முருதலாவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 30 முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
