இலங்கை
வெதுப்பக பொருள் போர்வையில் கஞ்சா விற்பனை
வெதுப்பக பொருள் போர்வையில் கஞ்சா விற்பனை
வெதுப்பக உற்பத்திகள் விற்பனை என்ற போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதக போதைப்பொருளை விற்பனை செய்து வந்த 56 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
லொறியொன்றில் வெதுப்பக உற்பத்தி பொருள் விற்பனை என்ற போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறித்த லொறி ஹட்டன் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 250 மதனமோதக பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைதான சந்தேக நபர் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
