Connect with us

இலங்கை

செவ்வந்தியின் அழகின் இரகசியம் வெளியானது: அவரே தெரிவித்த வாக்குமூலம்

Published

on

Loading

செவ்வந்தியின் அழகின் இரகசியம் வெளியானது: அவரே தெரிவித்த வாக்குமூலம்

இந்தியா வழியாக நேபாளத்திற்கு தப்பிச் சென்ற இஷாரா செவ்வந்தி, அங்கு தங்கியிருந்த காலத்தில் வேறு வழியில்லாமல் தனது தோற்றம் குறித்து அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியதாக விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

 காலத்தைக் கடத்துவதே ஆரம்பக் காரணமாக இருந்தாலும், பின்னர் அது ஒரு பழக்கமாக மாறி, அழகு நிலையத்திற்குச் செல்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

 தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் செவ்வந்தி, தனது தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்து விசாரணையாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கனேமுல்ல சஞ்சீவ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இல.05 அறையில் வைத்து கொலை செய்யப்பட்ட பிறகு, இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் வரை சுமார் மூன்று மாதங்கள் இலங்கையில் பல்வேறு இடங்களில் தனது வாழ்க்கையைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்ததாகவும், அதன் பிறகு இந்தியாவுக்கு தப்பிச் சென்று நேபாளத்தில் தங்கியிருந்த போதுதான் தனது தோற்றத்தை மாற்றிக் கொள்ள முடிவெடுத்ததாகவும் அவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். 

 அதன்படி, நேபாளத்தின் பக்தாபூர் பகுதியில் உள்ள ஒரு சாதாரண அறையில் (கூலி அறையில்) வசித்து வந்த அவர், நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு அழகு நிலையத்திற்கு அடிக்கடி சென்று தனது தோற்றத்தை மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Advertisement

 கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டபோது இருந்த அவரது தோற்றத்தை விட, இன்று அவர் அழகாகக் காணப்படுவது சமூகத்தில் பேசும் பொருளாகியுள்ளது.

 இன்று, அவரை வைத்து செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு நபர்களுடன் இணைத்து உருவாக்கப்பட்ட காட்சிகளைக் கொண்ட காணொளிகள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன