சினிமா
கழுத்தில் தாலி..திருமணத்தை முடித்த ஸ்ருதி நாராயணன்!! மாப்பிள்ளை புகைப்படம்..
கழுத்தில் தாலி..திருமணத்தை முடித்த ஸ்ருதி நாராயணன்!! மாப்பிள்ளை புகைப்படம்..
சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணன், நடிகையாக வேண்டும் என்ற கனவோடு விசுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்தார். படித்துக்கொண்டிருக்கும் போதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தயாரிப்பாளராக பணியாற்றி, பின் விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலிலும் கார்த்திகை தீபம், மாரி போன்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ ஒன்று வைரலாகி மிகப்பெரியளவில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அது போலி என்று ஸ்ருதி கூறிவந்தார்.ஒரே இரவில் அவரின் அந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு, ஒட்டுமொத்த ஊடகமும் ஸ்ருதியை கண்டபடி விமர்சித்து வந்தனர்.ஆனால் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத ஸ்ருதி, சீரியல்களில் நடித்தும், திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற ரோலில் நடித்து வரும் ஸ்ருதி, கழுத்தில் தாலியுடன் மணப்பெண் கோலத்தில் மாப்பிள்ளையுடன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.சீரியலில் முருகன் என்பவரை காதலித்து வந்த வித்யா, தற்போது அவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஷூட்டிங்கில் எடுத்த கல்யாண புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகை ஸ்ருதி நாராயணன்.
