Connect with us

இலங்கை

நாமலுக்கும் இசாரா செவ்வந்திக்கும் காதலா? ஊடக சந்திப்பில் வெளியான உண்மை

Published

on

Loading

நாமலுக்கும் இசாரா செவ்வந்திக்கும் காதலா? ஊடக சந்திப்பில் வெளியான உண்மை

தான் காதலித்தது இசாரா செவ்வந்தியை அல்ல, லிமினி என்பவரை தான் காதலித்தாகவும், தமக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர்கள்  எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும், பாதாள உலகம் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்த அவர் பாதாள உலகில் தொடர்புடையவர்களை காவல்துறை விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அது காவல்துறையின் பொறுப்பு ஆனால் பாதாள உலகில் தொடர்புடையவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதையும் காவல்துறை கவனிக்க வேண்டும்.

ஒரு குழு திருடர்களுக்காக பதினேழு கடவுச்சீட்டுக்களை உருவாக்கி நாட்டை விட்டு வெளியேற்றியதாக காவல்துறைக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் கூறினார்.

Advertisement

ஒரு செயலாளர் திருடர்களுக்காக பதினேழு கடவுச்சீட்டுக்களை உருவாக்கி நாட்டை விட்டு வெளியேற்றியதாக காவல்துறைக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் கூறினார்.

அப்படியானால் இந்த செயலாளர் யார்?

இந்த தகவலை காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கு கொடுத்தது யார்? இதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கு உள்ளது.

Advertisement

வெளியேறிய மக்களில் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்திருக்க வேண்டும். எனவே, காவல்துறைக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், 323 கொள்கலன் தப்பியது போலவே பாதாள உலகத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதா என்ற கேள்வி இந்த நேரத்தில் எழுகிறது.

அரசாங்கத்தில் சிலர் “நீதிமன்ற உத்தரவுகளை ஏன் ஏற்க வேண்டும்?” என்று சொல்லும் நிலையை அடைந்துவிட்டனர். இதிலிருந்து அமைப்பு மாற்றம் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன