Connect with us

இலங்கை

மாதம் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு சாப்பிட்ட முன்னாள் சபாநாயகர்!

Published

on

Loading

மாதம் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு சாப்பிட்ட முன்னாள் சபாநாயகர்!

முன்னாள் சபாநாயகர் ஒருவருக்கு அவரது பதவிக் காலத்தில் உணவுக்காக மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பான முழுமையான கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

 பாராளுமன்றத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடத்தப்பட்ட முழுமையான கணக்காய்வின் அறிக்கை, பதில் கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பிலவினால் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

Advertisement

 சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் பணிப்புரைக்கமையவே இந்த விசேட கணக்காய்வு விசாரணை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

 இந்த கணக்காய்வு அறிக்கையில் பாராளுமன்றத்தின் பல்வேறு துறைகளிலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல முக்கிய நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்த தகவல்கள் விரிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இந்த முழுமையான கணக்காய்வு அறிக்கை எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன