இலங்கை
வேண்டும் வரம் தரும் கந்த சஷ்டி விரதம் ; 22ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை!
வேண்டும் வரம் தரும் கந்த சஷ்டி விரதம் ; 22ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை!
சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் . அதாவது அழகன் முருகனை நினைத்துப் கந்த சஷ்டி விரதத்தை இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பது ஆன்றோர் வாக்கு.
கந்த சஷ்டி விரதம் இருந்தால் மனதில் நல்ல எண்ணங்களும் அமைதியும் உண்டாகும் என்பது அதன் மறைபொருளாகும்.
இவ்வரும் கந்த சஷ்டி விரதம் அக்டோபர் 22ஆம் திகதி ஆரம்பிக்கிறது அக்டோபர் 27 ஆம் தேதி முடிவடைகிறது.
பக்தர்கள் சஷ்டிக்கு முன்பாக அமாவாசைக்கு ஆரம்பித்து. சஷ்டிக்கு முடிப்பார்கள்
சஷ்டி விரதத்தின் மிக அற்புதமான பலன்களை முருகன் பக்தர்கள் வாழ்க்கையில் அனுபவித்து இருக்கிறார்கள்.
கருணையின் கடலான கந்தனை நாம் மனதார வழிபட்டு விரதமருந்து பிரார்த்தனை செய்தால் நம்மிடம் இருக்கக்கூடிய அகங்காரம், ஆணவம், அடிமைத்தனம், பொருளாதார விருத்தியின்மை, சந்ததி விருத்தியின்மை, கஷ்டம், கொடுமை, பிரச்சனை, வியாதி, போன்றவற்றில் இருந்து நம்மை முருகர் காத்தருளி ரட்சித்து விமோசனம் அளிப்பார் என்பது நிதர்சனமான உண்மை.
விரதமிருப்போர் காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் முருகருக்கு அலங்காரம் செய்து நெய் தீபம் காட்டி மனதார வேண்டுதல்களை நீங்கள் அவர் பாதத்தில் வைக்கலாம்.
அப்பொழுது சரவணபவ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது மூலம் அவருக்கு மந்திர காணிக்கை செலுத்தி வேண்டும் வரத்தை பெற்றுக் கொள்ளலாம்.
பேப்பரில் எழுதினாலும் உங்களுடைய அர்ப்பணிப்பு நிச்சயம் வீண் போகாது.
நோய் பிடியில் இருப்பவர்கள் இந்த மந்திரத்தை 108 முறை அல்ல 1008 முறை சொன்னாலும் ஒரு சனத்தில் நோயே இல்லாமல் செய்து விடுவார் முருகர்.
இப்படியாக அவருடைய நாமத்தை சத்தமாக ஜெபித்தாலும் சரி மனதிற்குள் ஜெபித்தாலும் சரி பேப்பரில் எழுதினாலும் சரி.
மனம் ஒருமனப்பட்டு எப்படி அவரை நினைத்தாலும் உங்களுக்கான வேண்டுதல் நிறைவேறும் என்பது முருகன் அருளும் வாக்கு.
கந்த சஷ்டி விரத முறைகள்
அதிகாலை எழுந்து நீராடி மனமுருகி வேலவனை நினைத்து ஆலயம் சென்று முருகனை வழிபட வேண்டும். ஆலயம் செல்ல முடியாதவர்கள் வீடுகளில்
பால் பழம் கற்கண்டு போன்றவற்றை நெய்வேத்தியமாக முருகருக்கு படைத்து விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
உண்ணாவிரதம் இருப்பவர்கள் காலையிலிருந்து மாலை வரை முழுவதுமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை இடையில் பால் பழம் அருந்தலாம் சாப்பிடலாம்.
அதே போல உஷ்ணம் அதிகமாகும் என்பதால் அவ்வப்பொழுது தண்ணீரை மட்டும் குடித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.
இன்னும் சிலர் ஒரு பொழுது மட்டும் இருந்து மதியத்திற்கு மேல் உணவு அருந்துவார்கள் .
தன்னை நினைந்து உருகும் பக்தர்களை முருகன் வாழ்வில் சகல் வளங்களும் தந்து காப்பான் என்பது திண்ணம்.
