Connect with us

தொழில்நுட்பம்

1 கிலோ தங்கம் = 1 ரூபாய்… ரூ.83,000 லட்சம் கோடி மதிப்புள்ள விண்கல்; இது மட்டும் நடந்தால் தங்கம் விலை சரியும்!

Published

on

golden asteroid

Loading

1 கிலோ தங்கம் = 1 ரூபாய்… ரூ.83,000 லட்சம் கோடி மதிப்புள்ள விண்கல்; இது மட்டும் நடந்தால் தங்கம் விலை சரியும்!

நாம் இதுவரை அறிந்த விண்கற்கள் பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளாலானவை. ஆனால், நமது சூரிய குடும்பத்தில் ஒரு விண்கல், ஒட்டுமொத்த பூமிப் பொருளாதாரத்தையும் விடப் பல மடங்கு மதிப்புள்ள தங்கம், இரும்பு மற்றும் நிக்கல் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களைச் சுமந்து கொண்டு சுற்றி வருகிறது. அதுதான் 16 சைகே (16 Psyche). இது வெறும் விண்கல் அல்ல; இது உலோகக் கரு (Metallic Core) என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.ரூ.83,000 லட்சம் கோடி மதிப்புள்ள விண்வெளிப் பொக்கிஷம்செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையில் உள்ள விண்கற்கள் பட்டையில் இருக்கும் இந்தச் சைகேவின் மிகப்பெரிய ஈர்ப்பு, அதன் அபரிமிதமான மதிப்பே ஆகும். இதில் நிறைந்துள்ள விலைமதிப்பற்ற உலோகங்களால், இதன் மொத்த மதிப்பு சுமார் $10,000 குவாட்ரில்லியன் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.83,000 லட்சம் கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பூமியின் ஒட்டுமொத்தப் பொருளாதார மதிப்பையும் விட அதிகமாகும். உருளைக்கிழங்கு வடிவத்தில், 173 மைல் அகலமும், 144 மைல் நீளமும் கொண்ட இந்தச் சைகே, முழுக்க முழுக்க உலோகங்களால் ஆனது.ஏன் இது முக்கியமானது? சைகேவின் உண்மையான முக்கியத்துவம் அதன் பண மதிப்பில் இல்லை, மாறாக அறிவியல் ரகசியத்தில்தான் உள்ளது. பூமி போன்ற நிலக் கோள்கள் (Terrestrial Planets) அனைத்தும் உருகுதல் மற்றும் பிரித்தல் செயல்முறைகள் மூலம் உருவானவை. அதாவது, கனமான உலோகங்கள் (இரும்பு, நிக்கல்) மையத்தை (Core) நோக்கியும், இலகுவான பாறைப் பொருட்கள் மேலோட்டை (Crust) நோக்கியும் பிரிந்து செல்லும். சைகே என்பது ஒரு தோல்வியடைந்த கோளின் உலோக மையமாக இருப்பதால், இதை ஆராய்வது. நம்மால் நேரடியாக அணுக முடியாத பூமியின் மையப் பகுதி எவ்வாறு உருவானது, அதன் அமைப்பு என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவும். சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் உருவாக்கத்தின் ஆரம்ப கட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு நேரடிச் சாளரமாகச் சைகே அமையும்.இந்த விண்கல்லை ஆய்வு செய்வதற்காகவே, நாசா விண்வெளி ஆய்வு வரலாற்றில் முதன்முறையாக, உலோகம் நிறைந்த உலகை நோக்கி ஒரு பிரத்யேகத் திட்டத்தை அனுப்பியுள்ளது. ‘சைகே’ விண்கலம் (Psyche Mission) அக்டோபர் 13, 2023 அன்று ஏவப்பட்டது. தற்போது ஒரு வினாடிக்கு 23 மைல் வேகத்தில் பயணிக்கும் இந்த விண்கலம், சுமார் 190 மில்லியன் மைல்களுக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து, ஆகஸ்ட் 2029-ல் சைகே விண்கல்லை சென்றடையும்.16 சைகே பூமியில் விழுந்தால் என்ன ஆகும்?விண்கல் 16 சைகே (16 Psyche) பூமியின் மீது விழுந்தால், அது உலகப் பொருளாதாரத்திற்குச் செல்வத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, பேரழிவை ஏற்படுத்தும். சைகேவின் விட்டம் சுமார் 226 கி.மீ. ஆகும். இந்த அளவிலான ஒரு சிறுகோள் பூமியைத் தாக்கினால், அது பூமியின் மேற்பரப்பில் ஆழமான பள்ளத்தை உருவாக்கி, உலகளாவிய நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், பல ஆண்டுகளாக சூரிய ஒளியைத் தடுக்கும் அளவுக்குப் புழுதி மேகங்கள் மற்றும் வளிமண்டலத்தில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தும். இருப்பினும், 1 கிலோ தங்கம் 1 ரூபாய் என்ற அளவுக்குச் செல்லும். அதன் விலை மிகவும் கடுமையாக வீழ்ச்சியடைந்து, அது இன்று அலுமினியம் அல்லது துத்தநாகம் (Zinc) போன்ற உலோகங்களுக்கு இருக்கும் அதே மதிப்பை மட்டுமே கொண்டிருக்கும் நிலை உருவாகும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன