இலங்கை
3 மில்லியன் பணத்துடன் போதைப்பொருள் கடத்தல்காரர் அதிரடியாக கைது!
3 மில்லியன் பணத்துடன் போதைப்பொருள் கடத்தல்காரர் அதிரடியாக கைது!
பொலன்னறுவை – பண்டிவேவ பகுதியில் 2.3 கிராம் ஹெராயின் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் மூலம் கிடைத்த வருமானமாக 3.02 மில்லியன் பணத்துடன் 28 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை காவல்துறை மற்றும் மனம்பிட்டிய K9 பிரிவு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலதிக விசாரணைகள் தொடர்வதால் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
