வணிகம்
Gold Rate Today, 19: தீபாவளி தொடர் உற்சாகம் – தங்கம் விலையில் மாற்றமில்லை… இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!
Gold Rate Today, 19: தீபாவளி தொடர் உற்சாகம் – தங்கம் விலையில் மாற்றமில்லை… இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!
தீபாவளி பண்டிகை இன்னும் ஒரு நாளில் வரவிருக்க, தங்கம் விலை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வருவது நகை விரும்பிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டு தொடக்கத்திலிருந்து தங்கம் விலை இடையறாது ஏற்றத்தாழ்வுகளுடன் உயர்ந்து வருவது மக்களின் வாங்கும் ஆற்றலை பெரிதும் பாதித்துள்ளது.பொதுவாக பண்டிகை காலங்களில் நகை கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தங்கம் விலை புதிய உச்சங்களை தொட்டிருப்பது, நகை வாங்க நினைக்கும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.கடந்த மாதம் தொடக்கத்தில் சவரன் தங்கம் விலை ரூ. 73,000 ஆக இருந்தது. அதன் பிறகு படிப்படியாக விலை அதிகரித்து, அக்டோபர் 6 ஆம் தேதி ரூ. 75,000-ஐ தாண்டியது. அதன் மறுநாளில் ரூ. 75,200 ஆகவும், அடுத்த நாள் ரூ. 75,760 ஆகவும் விலை உயர்ந்தது. இந்த திடீர் உயர்வு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.கடந்த வார தொடக்கத்தில் விலையில் சிறிய சரிவு ஏற்பட்டது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை ரூ. 640 குறைந்திருந்தது. புதன்கிழமையும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 84,320 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மீண்டும் விலை ஏற்றம் கண்டது.தங்கம் விலை: தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரன். ரூ. 96,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 12,000 -க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலை: வெள்ளியின் விலையும் இன்று சற்று சரிந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 190 ஆகவும், ஒரு கிலோ ரூ. 1,90,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்த குறைவு, தீபாவளியை முன்னிட்டு நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியாக மாறியுள்ளது. வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு முன் போனஸ் தொகையைப் பெற்று நகை வாங்கும் பாரம்பரியம் இருப்பதால், விலை குறைவு பலரின் திட்டங்களை இது காக்கும் என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதே சமயம், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வும், உள்ளூர் தேவையும் சேர்ந்து தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தீபாவளிக்கு முன் தங்கம் விலை இன்னும் ஒரு புதிய உச்சத்தை எட்டும் அபாயம் காணப்படுகிறது.மொத்தத்தில், தீபாவளியை முன்னிட்டு தங்கம் விலையின் அதிரடி குறைவு பொதுமக்களுக்குள் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
