இலங்கை
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் ஆண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை..!
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் ஆண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை..!
கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் பகுதியில் ஆண் ஒருவரை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்கராயன்குளம், ஈச்சங்குளம் பகுதியில் அந்த நபரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், அவர் கடுமையாக அடிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என ஆரம்ப விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
தற்போது உயிரிழந்த நபரின் அடையாளம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவத்தின் காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
