சினிமா
தீப ஒளியுடன் கிளாமராக போஸ் கொடுத்த தர்ஷா… ரசிகர்களைக் கவர்ந்த லேட்டஸ்ட் போட்டோஸ்.!
தீப ஒளியுடன் கிளாமராக போஸ் கொடுத்த தர்ஷா… ரசிகர்களைக் கவர்ந்த லேட்டஸ்ட் போட்டோஸ்.!
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 மற்றும் 8-இல் கலந்து கொண்டு ரசிகர்களிடம் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் – தர்ஷா குப்தா. சீரியல்கள் மற்றும் போட்டோஷூட்கள் மூலமாகப் புகழ் பெற்ற இவர், தற்போது மீண்டும் தன்னுடைய ஸ்டைலிஷ் லுக் மற்றும் புது போட்டோக்களால் இணையத்தை கலக்கி உள்ளார்.தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள விளக்குகளோடு கூடிய கவர்ச்சிகரமான போட்டோஷூட், ரசிகர்களின் கண்களை கவர்ந்ததோடு, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.தர்ஷா குப்தா தனது திரையுலக பயணத்தை சில சீரியல்களுடன் தொடங்கினார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அவருக்கு அடையாளம் கிடைத்தது. அவரது நேர்மையான பேச்சு, கம்பீரமான அட்டிட்யூட், தைரியம் ஆகியவை ரசிகர்களை அதிகம் ஈர்த்தது.அதற்குப் பின் அவர் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ஸ்டைலிஷ் லுக்குகளுடன் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் தொடர்ச்சியாக கலக்கி வருகிறார்.இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தர்ஷா தன்னுடைய புதிய போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். அவை தற்பொழுது வைரலாகி வருகின்றது.
