இலங்கை
21 மாணவர்கள் கைது ; பல்கலையிலிருந்து உடன் வௌியேறுமாறு அறிவுறுத்தல்
21 மாணவர்கள் கைது ; பல்கலையிலிருந்து உடன் வௌியேறுமாறு அறிவுறுத்தல்
ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் அறுவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தால் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
