வணிகம்
Gold Rate Today, Oct.20: தீபாவளிக்கு இன்ப அதிர்ச்சி: அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
Gold Rate Today, Oct.20: தீபாவளிக்கு இன்ப அதிர்ச்சி: அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வந்த தங்கத்தின் விலை, தீபாவளி தினமான இன்று (அக்டோபர் 20) அதிரடியாகக் குறைந்துள்ளது. சேமிப்பின் அடையாளமாகத் திகழும் தங்கத்தின் விலை உயர்வால் வாங்க முடியாமல் தவித்த சாமானிய மக்களுக்கு இந்த விலை குறைப்பு சற்று ஆறுதல் அளித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு, தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது.கடந்த மாதம் தொடக்கத்தில் சவரன் தங்கம் விலை ரூ. 73,000 ஆக இருந்தது. அதன் பிறகு படிப்படியாக விலை அதிகரித்து, அக்டோபர் 6 ஆம் தேதி ரூ. 75,000-ஐ தாண்டியது. அதன் மறுநாளில் ரூ. 75,200 ஆகவும், அடுத்த நாள் ரூ. 75,760 ஆகவும் விலை உயர்ந்தது. இந்த திடீர் உயர்வு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த வார தொடக்கத்தில் விலையில் சிறிய சரிவு ஏற்பட்டது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை ரூ. 640 குறைந்திருந்தது. புதன்கிழமையும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 84,320 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மீண்டும் விலை ஏற்றம் கண்டது. நேற்று (அக்.19) தங்கம் விலையில் எந்த மாற்றமின்றி சவரன் ரூ. 96,000 க்கு விற்பனை செய்யப்பட்டது.தொடர்ந்து தீபாவளி தினமான இன்று (அக்.20ம் தேதி) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து 1 கிராம் ரூ.11,920-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.95,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து 1 கிராம் ரூ.9,850க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ. 78,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளிளி விலையில் எந்த மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.190க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
