Connect with us

தொழில்நுட்பம்

ஜப்பானில் இனி ஷாப்பிங் ஈசி.. இந்திய பயணிகள் க்யூஆர் ஸ்கேன் செய்து யு.பி.ஐ மூலம் செலவு செய்யலாம்!

Published

on

japan upi2

Loading

ஜப்பானில் இனி ஷாப்பிங் ஈசி.. இந்திய பயணிகள் க்யூஆர் ஸ்கேன் செய்து யு.பி.ஐ மூலம் செலவு செய்யலாம்!

இனி ஜப்பானுக்கு டூர் போகும்போது பணத்தை மாற்றுவது, கார்டுகளைத் தேடுவது என எந்தச் சிக்கலும் இல்லை. நம்ம ஊரில் பிரபலமாக இருக்கும் யு.பி.ஐ மூலம் அங்கேயும் இனி சுலபமாகப் பணம் செலுத்தலாம். இந்த வரலாற்றுச் சாதனையைச் சாத்தியப்படுத்த, இந்தியாவின் தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) பன்னாட்டுப் பிரிவான NPCI International Payments Ltd., ஜப்பானியத் தொழில்நுட்ப ஜாம்பவானான NTT DATA-வின் ஜப்பான் பிரிவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அக்டோபர் 7 அன்று கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஜப்பானில் உள்ள NTT DATA-வின் வணிக நிறுவனங்களில் (கடைகளில்) இனி யு.பி.ஐ. ஏற்க முடியும். ஜப்பானுக்குப் பயணம் செய்யும் இந்தியப் பயணிகள், தங்கள் மொபைலில் உள்ள யு.பி.ஐ ஆஃப் பயன்படுத்தி, கடைகளில் உள்ள க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்து உடனடியாகப் பணம் செலுத்தலாம். இதனால், வெளிநாட்டுக் கரன்சி கார்டுகள் (Forex Cards), கிரெடிட் கார்டுகள் அல்லது கையில் பணம் எடுத்துச் செல்லும் அவசியம் குறையும். ஜப்பானிய வணிகர்களுக்கும் யு.ஐ.பி-யி மாபெரும் சந்தையை அணுக வாய்ப்பு கிடைக்கும்.NTT Data-வின் கொடுப்பனவு பிரிவுத் தலைவர் மசனோரி குரிஹாரா கூறுகையில், “ஜப்பானில் யு.பி.ஐ-யை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்திய சுற்றுலாப் பயணிகளின் ஷாப்பிங்கை மிகவும் வசதியாக மாற்ற விரும்புகிறோம். இது ஜப்பானிய வணிகர்களுக்கும் புதிய சந்தை வாய்ப்பை உருவாக்கும்” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.யு.பி.ஐ-யின் பிரம்மாண்ட வளர்ச்சி!2016-ல் இந்தியாவில் தொடங்கப்பட்ட யு.பி.ஐ, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உலகில் புரட்சியை ஏற்படுத்தியது. இதன் வளர்ச்சி வேகம் பிரமிக்க வைக்கிறது. செப்டம்பர் 2025 நிலவரப்படி, இந்தியாவில் ஒரே மாதத்தில் 19.63 பில்லியன் யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதன் மதிப்பு ரூ.24.9 டிரில்லியன். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், யு.பி.ஐ. பரிவர்த்தனைகளின் அளவு 31% அதிகரித்துள்ளது.இந்திய கார்டு நெட்வொர்க்கான ரூபே, ஜப்பானின் JCB International உடன் கூட்டு சேர்ந்துள்ளது. ரூபே JCB கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய ஐந்து நாடுகளில் உள்ள கடைகளில் (POS) கார்டைப் பயன்படுத்தினால், 25% கேஷ்பேக் கிடைக்கும். 2025, டிசம்பர் 31 வரை இந்தக் கேஷ்பேக் சலுகை நீடிக்கும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன