வணிகம்
முகூர்த்த வர்த்தகம் 2025: ஒரு வருட லாபத்திற்கு உத்தரவாதம்- முதலீடு செய்யுமுன் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 உலக அம்சங்கள்
முகூர்த்த வர்த்தகம் 2025: ஒரு வருட லாபத்திற்கு உத்தரவாதம்- முதலீடு செய்யுமுன் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 உலக அம்சங்கள்
Diwali Muhurat Trading Session Timing: இந்தியப் பங்குச் சந்தையில், தீபாவளி பண்டிகையன்று நடைபெறும் முகூர்த்த வர்த்தகம் (Muhurat Trading) என்பது அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பிற்கான ஒரு புனிதமான அமர்வாகக் கருதப்படுகிறது. இன்று (அக்டோபர் 21, 2025) பிற்பகல் 1:45 முதல் 2:45 வரை இந்த சிறப்பு வர்த்தகம் ஒரு மணி நேரத்திற்கு நடைபெற உள்ளது.பழங்கால நம்பிக்கையின்படி, இந்த சுப நேரத்தில் செய்யப்படும் முதலீடு, ஓராண்டு முழுவதும் வெற்றியையும் லாபத்தையும் அள்ளித் தரும். இந்த நல்ல நாளைப் பயன்படுத்தி நீண்ட கால முதலீடுகளுக்காக பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம்.இந்த ஒரு மணி நேர அமர்வுக்கு முன்னதாக, சந்தையின் போக்கைத் தீர்மானிக்கப் போகும் மிக முக்கியமான 5 உலகளாவிய மற்றும் உள்நாட்டு அம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போம்!1.இந்தியச் சந்தையின் எதிர்பார்ப்புகள்: லாப வளர்ச்சிதான் முக்கியம்!கடந்த சம்வத் 2081-இல் இந்தியச் சந்தை எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படவில்லை. இதற்குக் காரணம், அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் சராசரியாக 24% ஆக இருந்த நிறுவனங்களின் லாப வளர்ச்சி, 2025 நிதியாண்டில் 5% ஆகக் குறைந்ததுதான்.ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தலைமை முதலீட்டு உத்தி வகுப்பாளர் டாக்டர் வி.கே. விஜயகுமார் இது குறித்துக் கூறுகையில், “நீண்ட காலத்தில், சந்தை என்பது நிறுவனங்களின் லாப வளர்ச்சியைப் பொறுத்தே அமையும். இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் பலனளிக்கத் தொடங்கினால், 2026 நிதியாண்டில் 8-10% ஆக உயர்ந்து, 2027 நிதியாண்டில் 15% வரை லாப வளர்ச்சி வேகம் எடுக்கலாம். இந்த எதிர்பார்ப்பு உண்மையானால், சம்வத் 2082-இல் சந்தை வலுவாக உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு லாபத்தைப் பெற்றுத் தரும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.2. ஆசிய மற்றும் அமெரிக்கச் சந்தைகளின் ஏற்றம்முகூர்த்த வர்த்தகத்திற்கு முன்னதாக, உலகச் சந்தைகளில் காணப்பட்ட பாசிட்டிவ் போக்கு இந்திய முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.ஆசியச் சந்தைகள்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று கருத்து தெரிவித்ததால், ஆசியச் சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமாகின. தென் கொரியாவின் கோஸ்பி (Kospi) குறியீடு தொடர்ந்து ஆறாவது நாளாகச் சாதனை உச்சத்தைத் தொட்டது.ஜப்பான் & இதர சந்தைகள்: ஜப்பானின் நிக்கி (Nikkei) குறியீடு கிட்டத்தட்ட 1% உயர்ந்து, 50,000 புள்ளிகளை நெருங்கியுள்ளது. சீனா, ஹாங்காங் மற்றும் ஆஸ்திரேலியா சந்தைகளும் ஏற்றம் கண்டன.அமெரிக்கச் சந்தைகள்: நேற்று (அக்டோபர் 20) டவ், எஸ்&பி மற்றும் நாஸ்டாக் குறியீடுகள் 1%க்கும் மேல் உயர்ந்து முடிவடைந்தன. அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எதிர்பார்ப்பும் இதற்கு ஒரு காரணம்.3. தங்கம் & கச்சா எண்ணெய் நிலை என்ன?உலகளாவிய சந்தைகளின் முக்கியப் பகுதிகளான கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகளும் முதலீட்டாளர்களுக்கு முக்கியமானவை.தங்கம்: பாதுகாப்பான முதலீடு மற்றும் அமெரிக்காவின் வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்புகள் காரணமாகத் தங்கம் விலை சாதனை உச்சத்தை நெருங்கி வர்த்தகமாகிறது. ஸ்பாட் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு $4,350 ஆக இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமிற்கு சுமார் ₹13,068 ஆக உள்ளது.கச்சா எண்ணெய்: அமெரிக்கா-சீனா வர்த்தகப் பதட்டங்கள் மற்றும் அதிகப்படியான விநியோகம் குறித்த கவலைகளால் கச்சா எண்ணெய் விலைகள் சற்று சரிந்தன. ப்ரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு $60.87-க்கு வர்த்தகமானது.4. நிறுவன முதலீட்டாளர்களின் செயல்பாடுகள் (FII & DII)அன்னிய மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (FII & DII) முதலீட்டுப் போக்கு, சந்தையின் பலத்தைக் காட்டுகிறது.அந்நிய முதலீட்டாளர்கள் (FII): அக்டோபர் 20 அன்று ₹790 கோடி மதிப்புள்ள பங்குகளை இவர்கள் நிகர வாங்குதல் (Net Buyers) செய்தனர். இருப்பினும், 2025-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், இவர்கள் 5 மாதங்களுக்கு நிகர விற்பனையாளர்களாகவே இருந்துள்ளனர்.உள்நாட்டு முதலீட்டாளர்கள் (DII): அக்டோபர் 20 அன்று இவர்கள் ₹2,485.46 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கி, நிகர வாங்குதலில் முன்னணியில் இருந்தனர். அக்டோபர் மாதத்திலும் இவர்களது வாங்கும் போக்கு வலுவாக உள்ளது.5. நீண்ட கால முதலீடுகளுக்கான பங்குத் தேர்வுகள்முகூர்த்த வர்த்தகம் பொதுவாகச் சென்டிமென்டால் உந்தப்படும் என்பதால், முதலீட்டாளர்கள் இந்த அமர்வில் நல்ல பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவார்கள். பல தரகு நிறுவனங்கள் 27% முதல் 33% வரை லாப வாய்ப்பு தரக்கூடிய 9 ‘வாங்குவதற்கான’ பரிந்துரைப் பங்குகளையும் (Buy Ideas) வெளியிட்டுள்ளன.முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது:இந்தச் சிறப்பு அமர்வில், வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமல், மேற்கண்ட உலகளாவிய மற்றும் உள்நாட்டு அம்சங்களை மனதிற்கொண்டு, நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புள்ள தரமான பங்குகளைத் தேர்ந்தெடுத்து, புத்திசாலித்தனத்துடன் முதலீடு செய்யுங்கள். உங்கள் செல்வம் பெருக, இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.
