பொழுதுபோக்கு
சட்டம் தப்பா போகும் போது வன்முறை வெடிக்கும்… என்னால பண்ண முடியாது போடா; திவாகரை விளாசிய பார்வதி
சட்டம் தப்பா போகும் போது வன்முறை வெடிக்கும்… என்னால பண்ண முடியாது போடா; திவாகரை விளாசிய பார்வதி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக சமூகவலைதளங்களில் பிரபலமான நபர்கள் அதிகம் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில், வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், வி.ஜே.பார்வதி, இன்ஸ்டா பிரபலம் பலூன் அக்கா, அகோரி கலையரசன் என பலர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் பங்கேற்றதால் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கடுமையாக விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம், நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்து கவனித்தும் வருகின்றனர். அதேபோல் கடந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், போட்டியாளர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லவும் அவர்களுக்கு பேசவும் அனுமதி அளிப்பார். ஆனால் விஜய் சேதுபதி அப்படி இல்லை என்ற விமர்சனமும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் பாதியில், விஜய் சேதுபதி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிடுவார் என்று நிகழ்ச்சியில் இருந்து ஒரே நாளில் வெளியேற்றப்பட்ட இயக்குனர் பிரவீன் காந்தி கூறியுள்ளார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்து நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பு அதிகமாக உள்ளது. #Day17#Promo1 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/hgSdqZOiEHஇதையடுத்து, கடந்த வாரம் திருநங்கை அப்சரா சி.ஜே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். தினமும் பல பல திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து மோதல்கள் வெடித்து வருகிறது. இந்நிலையில், இன்று வெளியான முதல் ப்ரொமோவில், பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்திருக்கிறார். அதற்கு நடுவராஜ வி.ஜே.பார்வதி மற்றும் திவாகர் உள்ளனர். அப்போது, ஆதிரை ஒரு ஜூஸ் பாட்டில் ரெடி பண்ணி கொண்டு வந்து வைத்திருக்கிறார். இதை பார்க்கும் வி.ஜே. பார்வதி பாட்டில் உடைந்திருப்பது போன்று இருக்கிறது என்று கூறுகிறார். அதற்கு ஆதிரை, ஆரஞ்ச் பாட்டிலை விட இந்த பாட்டிலில் வித்தியாசம் இருந்தால் காட்டுங்கள் என்று கூறுகிறார். இதனால் கடுப்பான வி.ஜே.பார்வதி, ஜூஸை எல்லாம் குப்பையில் கொட்டுகிறார். இறுதியில் பொருமை இழந்த ஆதிரையும் கலையரசனும் ஜூஸ் பாட்டில் எல்லாவற்றையும் அடித்து நொருக்கிறார்கள். அப்போது வி.ஜே பார்வதியை பார்த்து ’சட்டம் தப்பா போகும் போது வன்முறை வெடிக்கும்’ என்று கலை கூறுகிறார். இதனுடன் முதல் ப்ரொமோ முடிவடைகிறது. #Day17#Promo2 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/pgyShIdPwKஇரண்டாவது ப்ரொமோவில், திவாகருடன் சண்டைபோடும் வி.ஜே. பார்வதி, என்னால் பண்ண முடியாது. உனக்காக என்ன பேசியிருக்கேனு எனக்கு தெரியும். என்னால பண்ண முடியாது போடா என்கிறார். அதற்கு திவாகர், நீ சொன்னத தானம்மா நான் கேட்கிறேன் என்கிறார். அதற்கு பார்வதி, உனக்கு எக்ஸ்ட்ரா சாப்பாடு கொடுக்கிறாங்கல்ல என்று திவாகரிடம் கத்துகிறார். இதனால் கடுப்பான திவாகர் உனக்கு எக்ஸ்ட்ரா சாப்பாடு தரலியா என்று கோவப்படுகிறார். இதனுடன் இந்த ப்ரொமோ முடிவடைகிறது. இந்த வீடியோ நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
