இலங்கை
பணவீக்கம் உயர்வு!
பணவீக்கம் உயர்வு!
கடந்த செப்ரெம்பர் மாதத்துக்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைக்குறியீட்டுக்கு அமைய மாதாந்திர நுகர்வோர் பணவீக்கம் உயர்ந்துள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 ஓகஸ்ட் மாதத்தில் 1.5% ஆக இருந்த நாட்டின் பணவீக்கம், 2025 செப்ரெம்பர் மாதத்தில் 2.1% ஆக அதிகரித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் 2.9வீதமாக இருந்த உணவு வகையின் முதன்மைப் பணவீக்கம், 2025 செப்ரெம்பர் மாதத்தில் 3.8 வீதமாக அதிகரித்துள்ளது.
இதேபோல், 2025 ஓகஸ்ட் மாதத்தில் 0.4 வீதமாக இருந்த உணவு அல்லாத வகையின் முதன்மைப் பணவீக்கம், 2025 செப்ரெம்பர் மாதத்தில் 0.7 வீதமாக அதிகரித்துள்ளது.
