இலங்கை
மாத்தறை – வெலிகம பிரதேசசபையில் துப்பாக்கிச்சூடு : தவிசாளர் படுகொலை!
மாத்தறை – வெலிகம பிரதேசசபையில் துப்பாக்கிச்சூடு : தவிசாளர் படுகொலை!
மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர இன்று (22.10) சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச சபைக்குள் வைத்தே துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான தவிசாளர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் வந்த இருவரே துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இவர் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரென்பது குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
