பொழுதுபோக்கு
மாறி மாறி வசூல் வேட்டை… ரூ.100 கோடியை நெருங்கும் ‘டியூட்’; பைசன் கலெக்சன் எவ்வளவு தெரியுமா?
மாறி மாறி வசூல் வேட்டை… ரூ.100 கோடியை நெருங்கும் ‘டியூட்’; பைசன் கலெக்சன் எவ்வளவு தெரியுமா?
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் ‘பைசன்’. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்த படம் தீபாவளியையொட்டி கடந்த 17-ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.இதேபோன்று, அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘டியூட்’. இந்தப் படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக கருத்தை அடிப்படையாக கொண்டு ஜாலியான படமாக உருவாகியுள்ள ‘டியூட்’ படமும் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் ‘டியூட்’ திரைப்படத்தின் காமெடி காட்சிகள் நன்றாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். காமெடி பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்ற விமர்சனத்தையும் சிலர் முன் வைக்கின்றனர். Extremely grateful for all your love! Thank you makkaley!🌸💥❤️❤️❤️@mari_selvaraj#BisonKaalamaadan 🦬@applausesocial@NeelamStudios_@nairsameer@deepaksegal@Tisaditi#DhruvVikram@anupamahere@LalDirector@PasupathyMasi#AmeerSultan@Ezhil_DOP@editorsakthi@Kumar_Gangappan… pic.twitter.com/U7BeVyJpSYஇப்படி போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்கள் ‘பைசன்’ திரைப்படத்தையும் ‘டியூட்’ திரைப்படத்தையும் திரையரங்கில் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இந்த இரு படங்களில் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பைசன்’ திரைப்படம் உலக அளவில் ஐந்து நாட்களில் ரூ.35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ள இயக்குநர் பா.இரஞ்சித் ‘உங்கள் அன்பிற்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன். நன்றி மக்களே’ என்று பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.DUDE continues the festivities at the box office 💥💥✨#DUDE grosses over 95 CRORES in 5 days worldwide ❤🔥Book your tickets now and celebrate #DudeDiwali 🔥🎟️ https://t.co/JVDrRd4PZQ🎟️ https://t.co/4rgutQNl2n⭐ing ‘The Sensational’ @pradeeponelife🎬 Written and… pic.twitter.com/Jo9f1ukrW8இதேபோன்று, ‘டியூட்’ திரைப்படம் வெளியான ஐந்து நாட்களில் உலக அளவில் ரூ.95 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ், சமூக வலைதளத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரையும் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை பார்த்ததில் ‘டியூட்’ திரைப்படம் தான் வசூலி முந்தியுள்ளது. இருந்தாலும், ‘டியூட்’ திரைப்படம் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியானது. வரும் நாட்களில் ‘பைசன்’ வசூலை குவிக்குமா? அல்லது ‘டியூட்’ வசூலை குவிக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
