Connect with us

இலங்கை

கற்பனை கதைகளை விஞ்ஞான பூர்வ ஆதாரங்களுடன் முதன்முதலில் உடைத்த நிகால் அபயசிங்க!

Published

on

Loading

கற்பனை கதைகளை விஞ்ஞான பூர்வ ஆதாரங்களுடன் முதன்முதலில் உடைத்த நிகால் அபயசிங்க!

கோவிட் உடலங்களை (ஜனாஸாக்கள்) புதைப்பதன் மூலம் கோவிட் கிருமிகள்.தண்ணீர் ஊடாக கடத்தப்படும் என்ற மெத்திகே விதானகேவின் வாதத்தை முன்வைத்து இனவாத ரீதியில் கோவிட் ஜனாஸாக்களை எரிப்பதற்கு கோட்டா அரசாங்கம் தீர்மானம் இயற்றி அவற்றை செயற்படுத்தி வந்தமை நாம் அறிந்தவை. 

 அவற்றை அடக்குவதற்கு அனுமதி தாருங்கள் என்று முஸ்லிம் மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் கோட்டா அரசாங்கத்திடம் கெஞ்சிய போதும் விஞ்ஞான ரீதியில் கோவிட் வைரசுகள் இலங்கையில் தண்ணீர் ஊடாக கடத்தப்படும். 

Advertisement

உங்களுக்கு வேண்டும் என்றால் வேறு நாடுகளுக்கு சென்று அடக்கிக்கொள்ளுங்கள் என்று வரட்டு பிடிவாதம் பிடித்துக்கொண்டு இருந்தபோது, இலங்கையில் இருந்து இவற்றை விஞ்ஞான ரீதியில் பிழை என்று யாரும் உரிய ஆதாரங்களை முன்வைக்க எந்தவொரு நிபுணராவது முன்வரமாட்டார்களா என்று முஸ்லிம்கள் ஏங்கிக்கொண்டிருந்த போது, இந்த பணியை செய்வதற்கு ஒருவர் முன்வந்தார். 

 அவரின் பெயர் Dr. நிகால் அபயசிங்க. தொற்றியல் தொடர்பான விஷேட வைத்திய நிபுணர் (Epidemiologist). இலங்கையின் தொற்றியல் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர். உலக சுகாதார அமைப்பிலும் பணிபுரிந்தவர். 

 கோவிட் வைரஸ் தண்ணீர் ஊடாக பரவும் சாத்தியமே அற்றது என்று இலங்கையில் முதன்முதலில் சமுத்தித விக்ரமரத்னவின் பேட்டியூடாக அடித்துக்கூறினார்.
அந்த பேட்டி வைரல் ஆனது. பல சிங்கள பத்திரிகைகளும் Dr. நிகால் அபயசிங்கவின் பேட்டியை பிரசுரித்தன. 

Advertisement

மெத்திகா விதானகே போன்றோர் பதில் இன்றி அதிர்ச்சியில் உரைந்து நின்றனர். இவரின் பேட்டியின் பின்னரே சில அரசியல்வாதிகள் கூட பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் சார்பாக குரல் கொடுக்க தொடங்கினர். 

 கற்பனை கதைகளை விஞ்ஞான பூர்வ ஆதாரங்களுடன் முதன்முதலில் உடைத்த Dr. நிகால் அபயசிங்கவுக்கு முஸ்லிம் சமூகம் கட்சி பேதமின்றி நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

 Razmi Razak

Advertisement

 முகநூல் பதிவு

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன