இலங்கை
சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு
சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு
நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக 123 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குருநாகல், அநுராதபுரம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப் புகள் ஏற்பட்டுள்ளன. அதே வேளை, 111 வீடுகள் சேதமடைந்துள் ளன. பல குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
