Connect with us

சினிமா

DUDE படத்தின் ஃபேமஸ் சீன்… Rehearsal-லயே வேற லெவல்ல ஆடும் மமிதாவின் வைரல் வீடியோ

Published

on

Loading

DUDE படத்தின் ஃபேமஸ் சீன்… Rehearsal-லயே வேற லெவல்ல ஆடும் மமிதாவின் வைரல் வீடியோ

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், முக்கிய கதாபாத்திரங்களில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி மற்றும் ஹிர்து ஹாரூன் நடித்துள்ள படம் தான் டியூட். இது அதிரடிக் காதல் மற்றும் காமெடி கலந்த திரைப்படமாகும். டியூட் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் அகன் என்ற கதாப் பாத்திரத்திலும், மமிதா பைஜு குறள் என்ற கதாநாயகி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.  இப்படத்தின் இசையை சாய் அபயங்கர் அமைத்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சர்வோபாரி பாலக்கரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மமிதா பைஜு . பின்னர் அவள் ஆபரேஷன் ஜாவா, கோ கோ, சூப்பர் சரண்யா , பிரேமலு  போன்ற மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதில் பிரேமலு படம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. இந்த படம் அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. தற்போது மமிதா பைஜு நடிப்பில் டியூட் படம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. இவருடைய கைவசம் அடுத்த ஆண்டுக்கான படங்களும் குவிந்துள்ளன.இந்த நிலையில், நடிகை மமிதா பைஜு டியூட் படத்தில் இடம்பெற்ற கருத்த மச்சான் பாடலுக்கு ஆடி ரியர்சல் பார்த்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன