Connect with us

இந்தியா

சபரிமலையை தரிசித்த ஜனாதிபதி திரெளபதி!

Published

on

Loading

சபரிமலையை தரிசித்த ஜனாதிபதி திரெளபதி!

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் சபரிமலை பயணத்தின்போது, அவர் திருவனந்தபுரத்தில் இருந்து பயணித்த இந்திய விமானப் படை உலங்கு வானூர்தியின் சக்கரம்,தற்காலிக வானூர்தி இறங்கு தளமொன்றின் கொங்கிரீட்டில் சிக்கிக்கொண்டதால் சிறிது பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டம், பிரமாடம் உள்விளையாட்டு அரங்கில் இரவோடு இரவாக அவசரமாக அமைக்கப்பட்ட அந்தக் கொங்கிரீட் இறங்குதளம் (ஹெலிபேட்) மழை காரணமாக முழுமையாக உலராதமையினால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

இதனையடுத்து, உடனடியாக அங்கிருந்த தீயணைப்பு வீரர்களும், காவல்துறை அதிகாரிகளும் இணைந்து உலங்குவானூர்தியை தள்ளி மீட்டனர். இந்த மீட்புக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதன் பிறகு, பயணத்தில் எந்த மாற்றமும் இன்றி சிற்றூந்தின் மூலம் பம்பை சென்றடைந்த ஜனாதிபதி, அங்கிருந்து இருமுடிக் கட்டி சபரிமலை சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன