இலங்கை
விமலின் வழக்கு டிசெம்பருக்கு
விமலின் வழக்கு டிசெம்பருக்கு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ அமைச்சராகச் செயற்பட்டபோது சுமார் 75 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துகள் மற்றும் நிதியை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக் கூறி, அவருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் டிசெம்பர் 18 மற்றும் ஜனவரி 20 ஆகிய திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
