சினிமா
ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்
ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்
போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் கிருஷ்ணாவும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். எனினும் காவல்துறை அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை அடுத்து ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. அதன்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில், போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி ஸ்ரீகாந்த் எதிர்வரும் 28ஆம் தேதியும், கிருஷ்ணா எதிர்வரும் 29ஆம் தேதியும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
