இலங்கை
11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
இலங்கையில் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கொழும்பு, காலி, கண்டி, களுத்துறை, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வடக்குக் கடற்கரைக்கு அருகில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேலும் வளர்ச்சியடைந்து வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
