பொழுதுபோக்கு
1963-ல் எழுதியது, 40 வருஷத்துக்கு பிறகு தங்கம் கொடுத்த எம்.ஜி.ஆர் பாடல்; கவிஞர் வாலி ப்ளாஷ்பேக்!
1963-ல் எழுதியது, 40 வருஷத்துக்கு பிறகு தங்கம் கொடுத்த எம்.ஜி.ஆர் பாடல்; கவிஞர் வாலி ப்ளாஷ்பேக்!
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த கவிஞர் வாலி, எம்.ஜி.ஆருக்காக எழுதிய ஒரு பாடல், பல வருடங்களுக்கு பிறகு அவருக்கு தங்க சங்கிலியை பரிசாக கொடுக்கும் அளவுக்கு நிலைத்திருந்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்தவர் தான் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர் தொடங்கி சிம்பு வரை பல நடிகர்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள வாலி, பாக்யராஜ் மட்டும் இல்லாமல் அவரது மகனுக்கும் பாடல் எழுதியுள்ளார். இவர் எழுதிய பல பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கிறது. குறிப்பாக இன்றைக்கும் எம்.ஜி.ஆர், பிறந்த நாள், நினைவுதினம் உள்ளிட்ட நாட்களில் அதிகமாக வாலி எழுதிய பாடல்கள் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.அந்த அளவிற்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ள வாலி, 1964-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படகோட்டி படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். எம்.ஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. குறிப்பாக இதில் இடம்பெற்ற ‘தொட்டால் பூ மலரும்’ என்ற பாடல் பலரின் கவனத்தை ஈர்த்த ஒரு பாடலாக இருக்கிறது. இந்த பாடல், 40 வருடங்களுக்கு பிறகு, ஒரு படதில் ரீ-மிக்ஸ் செய்யப்பட்டது.நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்த முதல் படம் நியூ. சிம்ரன், நாயகியாக நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது. படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஒரு பழைய பாடல் ‘பேசுவது கிளியா’ ரீ-மிக்ஸ் செய்யலாம் என்று எஸ்.ஜே.சூர்யா சொன்னபோது ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் அதன்பிறகு அவரே ‘தொட்டால் பூ மலரும்’ பண்ணலாம் என்று கூறியுள்ளார். அதன்பிறகு தான் இந்த பாடல் அந்த படத்தில் இடம் பெற்றுள்ளது.இந்த படத்தில் வாலியும் பாடல்கள் எழுதியிருந்தாலும், அவரின் பழைய பாடலான தொட்டால் பூ மலரும் பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாடலுக்காக எஸ்.ஜே.சூர்யா வாலிக்கு 5 பவுண் தங்க சங்கிலியை பரிசாக கொடுத்துள்ளார். இதை பார்த்த வாலி, இந்த பாடல் இத்தனை ஆண்டுக்கு பின் எனக்கு தங்கம் கொடுக்கும் என்று நினைக்கவே இல்லை என்று வாலி எஸ்.ஜே.சூர்யாவுடனான உரையாடலில் கூறியுள்ளார். 1963 ஏப்ரல் மாதத்தில் எழுதிய ஒரு பாட்டுக்கு, இப்போ தங்கம் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். பி.வாசு இயக்கத்தில் அவரது மகன் ஹீரோவாக அறிமுகமான படத்திற்கு தொட்டால் பூ மலரும் என்று டைட்டில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
