இலங்கை
கிளிநொச்சியில் விசேட சோதனை நடவடிக்கை ; சிக்கிய சந்தேகநபர்
கிளிநொச்சியில் விசேட சோதனை நடவடிக்கை ; சிக்கிய சந்தேகநபர்
கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் கொழும்பிலிருந்து வருகை தந்த பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து பொதிகளில் பொதி செய்யப்பட்ட கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் செவ்வந்தி தங்கி இருந்தமை தொடர்பு விசாரணை மேற்கொள்வதற்காக கொழும்பிலிருந்து வருகை தந்த குழுவினர் இன்று(24.10.2025) மாலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது அந்த பகுதியில் இருந்து மேற்படி கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் சான்று பொருட்களும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
