Connect with us

சினிமா

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா ஜான்வி கபூர்!! உஷாராக அவரே சொன்ன பதில்…

Published

on

Loading

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா ஜான்வி கபூர்!! உஷாராக அவரே சொன்ன பதில்…

இந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். பாலிவுட் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கால் பதித்து வருகிறார் ஜான்வி. அவர் நடித்த படங்கள் சரியான வரவேற்பை பெறாவிட்டாலும் பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.பாலிவுட் வட்டாரத்தில் ஜான்வி கபூர், ரைனோ ஃபிளாஸ்டிக் (மூக்கு வடிவத்தை மாற்றும் சிகிச்சை) போன்ற பல அறுவை சிகிச்சை செய்திருப்பதாக கூறப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் இதுபற்றி விவாதம் நடந்து வருகிறது.மேலும் தனது உதடுகளை பெரிதாக்க லிப் ஃபில்லர் அறுவை சிகிச்சையும் செய்திருப்பதாக கூறும் சந்தேகங்களை நீக்கும் முயற்சியில் ஜான்வி ஈடுபட்டுள்ளார். ட்விங்கிள் கன்னா மற்றும் கஜோல் முன்னியிலையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டாரா இல்லையா என்ற சந்தேகம் எழுத்துள்ளது.அதில், தனக்கு எதையும் மறைக்க விருப்பமில்லை என்றும் விஷயங்களை ரகசியமாக வைப்பதில்லை என்றும் கூறியுள்ளார். என் தாயார் ஸ்ரீதேவியின் வழிக்காட்டுதலும் இயற்கையாகவே இருந்தது.இளம்பெண்கள் அழகாகத்தோன்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய தான் ஊக்குவிக்கவில்லை என்றும் அந்த நோக்கம் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்ற வாக்கியத்தில் நம்பிக்கை கொண்டவள் நான், நீங்கள் என்ன செய்தாலும் அதை மனதில் இருந்து செய்யுங்கள் என கூறியும் இருக்கிறார்.மேலும், பஃபேலோ – பிளாஸ்டிக் சிகிச்சைக்கு குறித்த விஷயத்தையும் மறுத்த ஜான்வி, ஒருவேளை யாராவது ஒரு இளம்பெண் வீடியோக்களை பார்த்து, அந்த அறுவை சிகிச்சை செய்ய முற்படும்போது ஏதாவது தவறு நடந்தால், அது வாழ்நாள் முழுவதும்வருத்தத்தில் வைக்கும்.வெளிப்படைத்தன்மை முக்கியம் என்று பஃபேலோ பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து மறுத்துள்ளார். அவர் அப்படி மறைமுகமாக மறுத்தாலும் முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பது உண்மை என்ற கருத்தை மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்று ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன