Connect with us

வணிகம்

‘பெரிதினும் பெரிது கேள்’… கோவையில் இளம் தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டுதல் மாநாடு

Published

on

WhatsApp Image 2025-10-25 at 16.50.29_453b086c (1)

Loading

‘பெரிதினும் பெரிது கேள்’… கோவையில் இளம் தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டுதல் மாநாடு

கோவையில் “பெரிதினும் பெரிது கேள்” என்ற தலைப்பில் இளம் தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டுதல் மாநாடு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர்கள், குறிப்பாக இளம் பெண் தொழில் முனைவோர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், பட்டிமன்ற பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், சுகி சிவம், சார்லஸ் காட்வின், தொழிலதிபர்கள் நேச்சுரல்ஸ் ஸ்பா சி.கே. குமரவேல், தங்கமயில் ஜுவல்லரி நிறுவனர் ரமேஷ், அணில் சேமியா நிறுவனர் சுகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.ஞான சஞ்சீவன குருகுலத்தின் நிறுவனர் ஸ்ரீ சசிகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “புதிய தொழில் முனைவோர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்ளும் சிறந்த வாய்ப்பாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. குறிப்பாக பெண்கள் தொழில் முனைவோர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்து தனி அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன” என்றார். மேலும், தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றம், சந்தை நிலவரம், ஆளுமை திறன் ஆகியவற்றில் போதிய கவனம் இல்லாததால் பல புதிய தொழில் முனைவோர்கள் தங்கள் முயற்சிகளை தொடர முடியாத சூழல் உருவாகிவருகிறது என்றும், அதனை மாற்றி புரிதலை ஏற்படுத்துவதே “பெரிதினும் பெரிது கேள்” நிகழ்வின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.இந்த மாநாடு இளம் தொழில் முனைவோர்களுக்கு வெற்றி நோக்கி முன்னேறவும், நிதி மேலாண்மை மற்றும் சந்தை தந்திரங்கள் பற்றிய விழிப்புணர்வையும் வளர்த்துக்கொள்ளவும் ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்றது.செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன