வணிகம்
மீண்டும் எகிறியது தங்கம் விலை: சவரன் ஒரே நாளில் ரூ.800 உயர்வு
மீண்டும் எகிறியது தங்கம் விலை: சவரன் ஒரே நாளில் ரூ.800 உயர்வு
சென்னை: அக்டோபர் மாத தொடக்கத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த ஒரு வாரமாக பெரும் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. உச்சத்தைத் தொட்டபின் அதிரடியாகச் சரிந்த தங்கம், தற்போது மீண்டும் கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது, வாடிக்கையாளர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது.இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே, தங்கம் விலை ஏறுமுகமாகவே காணப்பட்டது. குறிப்பாக, கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற இதுவரை காணாத உச்சத்தைத் தொட்டு, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, விலை எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.இந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி முதல் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. இதன் உச்சமாக, அக்டோபர் 22-ஆம் தேதி ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு ரூ.460-ம், சவரனுக்கு ரூ.3,680-ம் அதிரடியாகச் சரிந்து, ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்திற்குக் கீழ் வந்தது.இந்தச் சரிவு நேற்று முன்தினமும் (அக். 23) சவரனுக்கு ரூ.320 குறைந்தது. நேற்று (அக். 24) காலையில் சவரனுக்கு ரூ.320 அதிகரித்த தங்கம் விலை, மாலையில் மீண்டும் சறுக்கலைச் சந்தித்தது. அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.140 குறைந்து, ஒரு சவரன் ரூ.91,200-க்கும், ஒரு கிராம் ரூ.11,400-க்கும் விற்பனையானது.வார இறுதியில் மீண்டும் உச்சம்!விலைச் சறுக்கலுக்குப் பிறகு, வார இறுதி நாளான இன்று (அக்டோபர் 25) தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.18 கேரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,625-க்கும், ஒரு சவரன் ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையில் மாற்றமில்லை!நேற்று (அக். 24) மாலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.170-க்கு விற்பனையான வெள்ளி விலை, இன்று எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.170 என்ற விலையிலேயே விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,70,000-க்கு விற்கப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால் ஏற்பட்ட தொடர்ச்சியான ஏற்றத்துக்குப் பிறகு, கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை கடுமையான ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
