சினிமா
லக்சுரி காரில் உல்லாசமாகத் திரியும் அட்லீ.. விலை மட்டும் இத்தனை கோடியா? ஷாக்கில் ரசிகர்கள்
லக்சுரி காரில் உல்லாசமாகத் திரியும் அட்லீ.. விலை மட்டும் இத்தனை கோடியா? ஷாக்கில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவை தாண்டி இந்திய திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டி வரும் பிரபல இயக்குநர் அட்லீ, சமீபத்தில் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். காரணம், அவர் மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ, மும்பையில் ரூ.8 கோடி மதிப்பிலான Rolls Royce Spectre என்ற லக்சுரி காருடன் காணப்பட்டிருப்பது தான்.இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அட்லீயின் லைஃப் ஸ்டைலைப் பற்றி ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரத் தொடங்கியுள்ளனர்.அட்லீ தன் கேரியரை உதவியாளராகத் தொடங்கினார். பின்னர் தனியாக இயக்கிய “ராஜா ராணி” மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். தொடர்ந்து “தெறி ”, “மெர்சல்”, “பிகில்” போன்ற விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படங்கள் அட்லீயை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாற்றின.அவரின் டெக்னிக்கல் ஸ்டைல், கமெர்ஷியல் டச் மற்றும் எமோஷனல் கனெக்ஷன் ஆகியவை அவரின் படங்களை ரசிகர்களிடையே சிறப்பாக இணைத்தன.பின்னர், பாலிவுட் உலகில் அட்லீ ஷாருக் கான் நடிப்பில் “ஜவான்” படத்தை இயக்கி, பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றியைப் பெற்றார். அந்த வெற்றிக்குப் பிறகு அட்லீயின் பெயர் இந்திய அளவில் ஒரு பிராண்டாக மாறியது.அட்லீ தற்போது வாங்கியதாக கூறப்படும் Rolls Royce Spectre என்பது உலகின் மிகப்பெரிய பிரீமியம் லக்சுரி கார்கள் பட்டியலில் இடம்பெறும் ஒரு மாடல். இந்தக் காரை தற்பொழுது அட்லீ வாங்கியிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
