Connect with us

சினிமா

இலங்கைக்கு விஜயம் சென்றார் கவிஞர் வைரமுத்து.. எதற்காகத் தெரியுமா?

Published

on

Loading

இலங்கைக்கு விஜயம் சென்றார் கவிஞர் வைரமுத்து.. எதற்காகத் தெரியுமா?

இலங்கையில் உருவாகும் “மில்லர்” திரைப்படம் தற்போது படப்பிடிப்பின் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்தப் படப்பிடிப்பை தொடங்குவதற்காக, புகழ்பெற்ற கவிஞர் மற்றும் இலக்கியவாதி வைரமுத்து இன்று (26.10.2025) இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.வைரமுத்து, தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல், இலக்கியத்திலும், கவிதையிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்திய கவிஞராவார். தனது பன்முக ஆற்றலால் திரைப்படங்களுக்கு உயர்ந்த கலைச்சுவையை சேர்க்கும் இவரின் பங்கு, “மில்லர்” படத்தின் படைப்புலகத்திலும் மிக முக்கியமானதாக உள்ளது.“மில்லர்” திரைப்படத்தின் தொடக்க விழா யாழ் வலம்புரியில் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்த விழாவில், படக்குழுவினர், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு, படத்தின் ஆரம்ப அத்தியாயத்தை நேரடியாக அனுபவிக்கவுள்ளனர்.இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது X தளப்பக்கத்தில்,” நல்லிலக்கியங்களும் நவகலைகளும் ஒரு போர்ச் சமூகத்திலிருந்து தான் பூத்துவர முடியும்..” என்ற உருக்கமான பதிவினையும் வெளியிட்டுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன