சினிமா
எம்.ஜி.ஆர் இறந்த பிறகு நான் தான் CM ஆக இருந்தேன்… வைரலான பாக்யராஜின் பேட்டி.!
எம்.ஜி.ஆர் இறந்த பிறகு நான் தான் CM ஆக இருந்தேன்… வைரலான பாக்யராஜின் பேட்டி.!
தமிழ் திரைப்பட உலகில் சிறந்த இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ், சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்த சில கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.அவர் குறிப்பாக, இறந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றியும், அவர் மறைந்த பிறகு நடந்த அரசியல் சூழலைப் பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாக்யராஜ், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை குறித்து கூறிய பதில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.பாக்யராஜ் கூறியதாவது, “எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் ஒரே வாரத்துக்குள்ள, ‘நீங்க தான் முதலமைச்சராக வரணும்’ என்று சிலர் சொன்னார்கள்.அப்போது நான், ‘எம்.ஜி.ஆர் இறந்து ஒரு வாரம் கூட ஆகல… இப்ப அதைப் பற்றி ஜோசிக்க வேணாம். மக்கள் அதை நகைச்சுவையா பார்ப்பாங்க. கொஞ்சம் நேரம் கொடுங்கன்னு கேட்டேன்.“பின்னர் நான் தான், ‘இப்போதைக்கு எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி அம்மாவை உட்காரச் சொல்லலாம்ன்னு சொன்னேன். அதற்குப் பிறகு பொது கூட்டம் வைச்சு ஜெயலலிதா அம்மாவை வைக்கிறதுக்கு யோசிப்போம் என்றேன்.” அவரின் இந்த கூற்றுகள், அந்நேரத்தில் நடந்த அரசியல் நிலையை நினைவூட்டுகின்றன. மேலும், பாக்யராஜின் இந்த உரை தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.
