சினிமா
“வீரா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா.? வெளியான அப்டேட் இதோ
“வீரா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா.? வெளியான அப்டேட் இதோ
தமிழ் டெலிவிஷன் உலகில் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் தொடராக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “வீரா” சீரியல் திகழ்கிறது. இந்த தொடரில் நடிகர் அருண் மற்றும் நடிகை வைஷ்ணவி இணைந்து நடித்து வருகின்றனர். இருவரின் ஜோடி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.வீரா சீரியல் தனது விறுவிறுப்பான திரைக்கதையாலும், அதிரடி திருப்பங்களாலும் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. சமீபத்திய எபிசொட்களில் நடந்த சம்பவங்கள் ரசிகர்களைக் கவரும் வகையில் காணப்பட்டன. இந்நிலையில், தற்போது இந்த தொடரில் புதிய முகம் ஒருவரின் என்ட்ரி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த புதிய முகம் வேறு யாருமல்ல, பிரபல டெலிவிஷன் நடிகை பிரணிகா தக்ஷு ஆவார்.சீரியலின் கதையோட்டம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது பிரணிகா தக்ஷுவின் என்ட்ரி கதைக்குள் புதிய பரபரப்பை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அவரது ரோல் கதையின் எந்தப் பக்கத்தை மாற்றப்போகிறது என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
