Connect with us

சினிமா

ஆறுதல் கூறும் நிகழ்ச்சி.. கரூர் மக்களுக்காக விஜய் எடுத்த அதிரடி உறுதிமொழி என்ன தெரியுமா?

Published

on

Loading

ஆறுதல் கூறும் நிகழ்ச்சி.. கரூர் மக்களுக்காக விஜய் எடுத்த அதிரடி உறுதிமொழி என்ன தெரியுமா?

பிரபல நடிகரும் அரசியல்வாதியமான விஜய்  தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின்  கட்சி கூட்டணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடைபெற்று சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய்  சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி 41 குடும்பத்தினரும்  நேற்று சென்னையில் உள்ள மாமல்லபுரத்திற்கு வரவழைக்கப்பட்டு இன்றைய தினம் விஜய் அவர்களை சந்திப்பார் என்றும், மதிய உணவிற்கு பிறகு அவர்கள் புறப்படுபவர்கள் என்றும்  தமிழக வெற்றி கழகத்தின்  உறுப்பினர் ஒருவர் ஏற்கனவே தெரிவித்தார்.இந்தச் சந்திப்பில்  20 குடும்பங்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், மீதமுள்ள 21 குடும்பங்களும் விஜயை பார்க்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதில் சில குடும்பங்கள்  நடிகர் விஜய் தங்கள் வீடுகளுக்கே வந்து சந்திப்பதற்கு பதிலாக சென்னைக்கு எதற்காக வரவழைக்கின்றார் என்று கேள்வி எழுப்பினர் . மேலும்  புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில்,  சென்னைக்கு வரவழைப்பது எதற்காக என்று சில குடும்பங்கள் கேள்வி எழுப்பி இருந்தன.இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில்  உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தையும் விஜய் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்கள் குடும்பத்தின் மருத்துவ, கல்வி செலவுகளை ஏற்பதாகவும், வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் விஜய் உறுதி அளித்துள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன