இந்தியா
சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ்!
சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ்!
தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை ஆர்.எஸ்.எஸ் விதைத்து வருகின்றது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட் சித்தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாடொன்று, தஞ்சாவூரில் நேற்று இடம்பெற்றது. இதில் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். இதன்போதே, ‘சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் தமிழகத்தில் ஆழமாக முன்னெடுக்கப்படுகின்றது. இதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ. க.வும் தீவிரமாகச் செயற்படுகின்றன’ என்று கூறியுள்ளார். 12 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதற்கு ஆர். எஸ்.எஸ். அமைப்பு மட்டும்தான் காரணம். அத்துடன், இந்தியாவின் குடியரசுத் தலைவரைப் பா.ஜ.க. தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பே தேர்ந்தெடுக்கின்றது. இதனை எவராலும் மறுத்துரைக்கமுடியாது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
