Connect with us

சினிமா

தந்தையின் ஆசையை நிறைவேற்றியதே போதும்… வைரலான சினேகனின் கருத்துகள்.!

Published

on

Loading

தந்தையின் ஆசையை நிறைவேற்றியதே போதும்… வைரலான சினேகனின் கருத்துகள்.!

தமிழ் திரையுலகில் அழகான பாடல் வரிகளால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பாடலாசிரியர் சினேகன். பல திரைப்படங்களுக்கு ஆழமான உணர்வுகளுடன் கூடிய பாடல்களை எழுதியவர் அவர். இந்நிலையில், சினேகனின் வாழ்க்கையில் பெரும் துயரமாக அமைந்த செய்தி ஒன்று இன்று வெளியாகியுள்ளது. அவரது தந்தை சிவசங்கு இன்று அதிகாலை காலமானார்.அவருக்கு வயது 102. வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி தற்போது தமிழ் சினிமா உலகில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.சினேகன் தமிழ் திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக திகழ்கிறார். அவர் எழுதிய பல பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அவரது பாடல்கள் பெரும்பாலும் காதல், வாழ்வியல், மனித உறவுகள் ஆகியவற்றை ஆழமாகப் பேசுபவை. சினேகனின் எழுத்து திறமைக்கு ரசிகர்களும் விமர்சகர்களும் பெரிதும் பாராட்டுக் கூறியுள்ளனர். இதற்கெல்லாம் பின்னால் இருந்த ஊக்கமூட்டம், அவரது தந்தை சிவசங்குவின் ஆதரவே.பின் சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். அதன்போது, சினேகனின் தந்தை சிவசங்கு “என் மகனின் திருமணத்தை பார்க்கணும்; அதுதான் என் ஒரே ஆசை. இத்தனை வருடமாக அவன் திருமணம் பண்ணாமல் இருக்கிறான். அதையும் பார்த்துட்டா நான் அமைதியாகப் போயிடுவேன்.” என்று கூறியிருந்தார். இந்த வார்த்தைகள் பிக்பாஸ் வீடு மற்றும் தொலைக்காட்சியில் பார்த்த அனைவரின் மனதிலும் பதிந்திருந்தன. அந்தப் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து சில ஆண்டுகள் கழித்து, சினேகன் தனது வாழ்வில் தந்தையின் ஆசையை நிறைவேற்றினார். நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில், நடிகை கன்னிகா திருமணம் செய்து கொண்டார்.அவரது மகன் திருமணம் செய்த மகிழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு நன்றி கூறிய காட்சி, சமூக ஊடகங்களில் அப்போது வைரலாகியது. சில மாதங்களுக்கு முன்பு, சினேகன் மற்றும் கன்னிகா தம்பதியருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த மகிழ்ச்சியான செய்தியை சினேகன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தபோது ரசிகர்களும், நண்பர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.அவரது மகள்களுக்கு “காதல்” மற்றும் “கவிதை” என அழகான தமிழ் பெயர்கள் வைத்தார். இதனால் சினேகனின் குடும்பம் மேலும் மகிழ்ச்சியில் மூழ்கியது.இவ்வாறு மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தில் திடீரென ஒரு இழப்பு ஏற்பட்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. எனினும் தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மனநிறைவு சினேகனுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது என தற்பொழுது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன