Connect with us

பொழுதுபோக்கு

பெற்றோரை நான் குறிப்பிடவில்லை… துஷாரிடம் மன்னிப்பு கேட்ட கம்ருதீன்; காரணம் இதுதான்

Published

on

kam

Loading

பெற்றோரை நான் குறிப்பிடவில்லை… துஷாரிடம் மன்னிப்பு கேட்ட கம்ருதீன்; காரணம் இதுதான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக சமூகவலைதளங்களில் பிரபலமான நபர்கள் அதிகம் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில், வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், வி.ஜே.பார்வதி, இன்ஸ்டா பிரபலம் பலூன் அக்கா, அகோரி கலையரசன் என பலர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் பங்கேற்றதால் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கடுமையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம், நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்து கவனித்தும் வருகின்றனர். அதேபோல் கடந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், போட்டியாளர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லவும் அவர்களுக்கு பேசவும் அனுமதி அளிப்பார். ஆனால் விஜய் சேதுபதி அப்படி இல்லை என்ற விமர்சனமும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் பாதியில், விஜய் சேதுபதி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிடுவார் என்று நிகழ்ச்சியில் இருந்து ஒரே நாளில் வெளியேற்றப்பட்ட இயக்குனர் பிரவீன் காந்தி கூறியுள்ளார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்து நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பு அதிகமாக உள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டார். தினமும் பல பல திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து மோதல்கள் வெடித்து வருகிறது. இந்நிலையில், கம்ருதீன், துஷாரிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், “என்னை மன்னித்துவிடு துஷார். நான் வளர்ந்த விதம் என்று தான் சொன்னேன். வளர்த்தவர்களை குறை சொல்லவில்லை. இப்போது என்னை எடுத்துக் கொண்டால் நீ கோபப்பட்டு, இப்படி பண்ணு என்று எங்கள் வீட்டில் சொல்லித் தரவில்லை. Nice 2 see Kamarudin.He realised his misake & said sry#BiggBossTamil9#BiggBossTamilpic.twitter.com/hAJLlg2LETநான் வளர்ந்த விதம். எனக்கு மறுக்கப்பட்ட விஷயங்கள் எல்லாம் சேர்த்து தான் நான் யோசிக்கிறேன். அன்று எதோ கெட்ட நேரம். இதற்கு முன்பு நாம் அப்படி இல்லை. அன்று நாம் கொஞ்சம் விலகி நின்றிருந்தோம் என்றால் மறுபடியும் பேசியிருந்திருக்கலாம்.  நான் கூறியதற்கு மன்னிப்பு கேடுக் கொள்கிறேன். நீ அப்படி இல்லை. நீ நிறைய நல்ல விஷயங்களை செய்திருக்கிறாய். எனக்கு தூங்கும் பொழுது ஞாபகம் வந்தது. உனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்று நான் உன் பெற்றோரை குறிப்பிட்டு சொல்லவில்லை” என்று கூறுகிறார். இதனுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன