பொழுதுபோக்கு
கனிக்கு செம சப்போர்ட் இருக்கு… கொந்தளித்த கம்ருதீன்; இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் வீடியோ
கனிக்கு செம சப்போர்ட் இருக்கு… கொந்தளித்த கம்ருதீன்; இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் வீடியோ
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற மொழிகளில் எப்படி பிக்பாஸ் பிரபலமாக உள்ளதோ அதே போன்று தமிழிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி 9-வது சீசனை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர். அதன்பின்னர் அந்த நடைமுறை மாறி தற்போது சமூக வலைதள பிரபலங்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் சமூக வலைதள இன்புளூவன்சர்கள் அதிகம் பங்கேற்றுள்ளனர். வி.ஜே.பார்வதி, கம்ருதீன், கலையரசன், திவாகர், கனி, அப்சரா சி.ஜே, பிரவீன் காந்தி, வினோத், ஆதிரை, அரோரா, ரம்யா ஜோ, சுபிக்ஷா, நந்தினி உட்பட 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில், முதல் வாரத்தின் எலிமினேஷனுக்கு முன்பே போட்டியாளர் நந்தினி தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.இதையடுத்து, முதல் வாரத்தில் பிரவீன் காந்தி, எலிமினேட் செய்யப்பட்டார். அதன்பின்னர், அப்சரா சி.ஜே, ஆதிரை என ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டனர். இனி வரும் வாரங்களில் யார் யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், வி.ஜே.பார்வதியும், திவாகரும் அதிகம் கண்டெண்ட் கொடுப்பதால் மக்கள் அவர்களை வெறியேற்ற ஓட்டளித்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் அவர்களை வெளியேற்றமாட்டார்கள் என்றும் ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது.பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் மோதல் போக்கு நீட்டித்து வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வரைலாகி வருகிறது. அதில், ப்ரீ நாமினேஷனுக்கு கனி அக்காவை தேர்ந்தெடுத்ததற்கு பதிலாக கம்ருதீனை தேர்ந்தெடுத்திருக்கலாம் அல்லவா? கனி அக்கா வெளியே போனால் கூட உள்ளே வந்துவிடுவார். அவருக்கு அவ்ளோ ரசிகர்கள் இருக்கிறார்கள். நீ ஏன் கம்ருதீனை தேர்ந்தெடுத்திருக்கவில்லை என்று பிரவீன் ராஜிடம், வினோத் கேட்கிறார். #PraveenRaj was totally cunning #GanaVinoth questioned —How could you forget #Kamrudin, who literally helped you win?If it was just the heat of the moment, then why nominate him, Praveen? 😎#BiggBossTamil9#BiggBoss9Tamil#BiggBossTamilpic.twitter.com/HuOEyIsFs5அதற்கு பிரவீன் ராஜ், அந்த இடத்தில் இருந்து கனி அக்காவை எடுப்பது கிட்சனோட வீக்னஸை காட்டும். எல்லோரும் கம்போர்ட் சோனை எதிர்பார்த்தால் வேலைக்கு ஆகாது என்று சொல்கிறார். அதற்கு கம்ருதீன், பிரவீன் ராஜிடம் நீ பச்சையாக சமாளிக்கிறாய் என்று கூறுகிறார். அதற்கு பிரவீன் நான் சமாளிக்கிறேனோ இல்லையோ இது என்னோட முடிவு என்கிறார். அப்போது, கம்ருதீன், கனி அக்கா நாமினேஷன் போனா அவர்களை காப்பாற்றுவதற்கு நிறைய பேர் இருக்காங்க. கனி அக்காவிற்கு நீ கொடுத்தது தவறு என்கிறார். மேலும், கனி அக்காவிற்கு செம சப்போர்ட் இருக்கிறது. கனி அக்கா இதுவரை எந்த நாமினேஷனும் பார்க்கவில்லை. பிரவீன் ராஜ் நல்ல ஏமாற்றுகிறார் என்று வினோத்திடம் கூறுகிறார். இதனுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.
