இலங்கை
சோதனையில் 781 பேர் கைது
சோதனையில் 781 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 884 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட் டதுடன், 781 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 305 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 180 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்திய 26 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 25 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
