இலங்கை
தெற்குக்கு கறுப்பு முத்திரை வடக்குக்கு வெள்ளையடிப்பா; குமுறுகின்றார் லக்ஷ்மன் யாப்பா
தெற்குக்கு கறுப்பு முத்திரை வடக்குக்கு வெள்ளையடிப்பா; குமுறுகின்றார் லக்ஷ்மன் யாப்பா
ஆயுதக்குழு விடயத்தில் தெற்குக்கு கறுப்பு முத்திரை குத்திவிட்டு, வடக்குக்கு வெள்ளையடிப்பு செய்யும் நடவடிக்கையே தேசிய மக்கள் சத்தியின் ஆட்சியில் இடம்பெறுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றஞ்சாட்டியுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ் தருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இதுதொடர்பில் தெரிவித்ததாவது:- நாட்டின் தென்பகுதியில் ஆயுதக் குழுக்கள் செயற்படுகின்றன என்ற கறையை ஏற்படுத்திவிட்டு, வடக்குக்கு வெள்ளையடிப்புச் செய்யும் நடவடிக்கை தற்போது இடம்பெறுகின்றது. ஆயுதக் குழுவின் செயற்பாடுகள், போதைப்பொருள்களின் பயன்பாடுகள் தொடர்பில் நாட்டின் தென்பகுதி மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.ஆனால், வடமாகாணத்தின் ஊடாகவே குற்றவாளிகள் தப்பிச்சென்றுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் எவரும் பேசுவதில்லை. புலம்பெயர் புலிகளைத் திருப்திப்படுத்தவே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன – என்றார்.
