இலங்கை
தேங்காய் திருட்டு
தேங்காய் திருட்டு
கொழும்புத்துறைப் பிரதேசத்தில் தேங்காய் திருடர்களின் கைவரிசை அதிகரித்துள்ளது. வெற்றுக்காணிகள், மற்றும் ஆட்கள் குடியிருக்காத வீடுகளில் உள்ள தென்னை மரங்களில் பட்டப்பகலில் நாளாந்தம் இவ்வாறு தேங்காய் திருடப்படுகின்றது. தேங்காயின் விலை அதிகரித்துள்ளதை அடுத்து திருடர்கள் தொடர்ச்சியாக கைவரிசை காட்டிவருகின்றனர் என்றும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
