பொழுதுபோக்கு
பிக்பாஸ் சீசன் 9: பார்வதி கேட்ட ஒற்றை கேள்வி… கோபத்தின் உச்சிக்கே சென்ற பிரவீன்ராஜ்
பிக்பாஸ் சீசன் 9: பார்வதி கேட்ட ஒற்றை கேள்வி… கோபத்தின் உச்சிக்கே சென்ற பிரவீன்ராஜ்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக சமூகவலைதளங்களில் பிரபலமான நபர்கள் அதிகம் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில், வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், வி.ஜே.பார்வதி, இன்ஸ்டா பிரபலம் பலூன் அக்கா, அகோரி கலையரசன் என பலர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் பங்கேற்றதால் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கடுமையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம், நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்தும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்கள் பட்டியல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும் போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதை மறந்து தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் என்ன பிரச்சனை வெடிக்கும் என்ற கோணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கனியின் உடைகளை பார்வதி கீழே வைத்துவிட்டு சென்றதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.தொடர்ந்து கனி, பார்வதி மன்னிப்பு கேட்டு என் உடைகளை எடுத்துக் கொடுத்தால் தான் நான் சாப்பிடுவேன் என்று கூறினார். அதன்பின்னர், பார்வதி நீங்கள் சாப்பாட்டை வைத்து தான் எல்லா அரசியலும் செய்வீங்க என்று சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்டார். இதனால் இந்த சண்டை முடிவுக்கு வந்தது. இருந்தாலும், பார்வதி தன் சண்டை போடும் ஸ்டார்டஜியை மீண்டும் கடைப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் டி.ஆர்.பி வழக்கத்திற்கு மாறாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.#Day23#Promo1 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/hQxG60tv1sஇந்நிலையில், 23-ஆம் நாளின் முதல் ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில், பார்வதி, பிரவீன் ராஜை பார்த்து நீங்க இதை ஆர்மீ கேம்ப் மாதிரி கொண்டு செலுத்த போறீங்களா என்று கேட்கிறார். அதற்கு அவர், இந்த வாரம் எப்படி கொண்டு போனுமோ அப்படி கொண்டு செல்வேன் என்கிறா. இதற்கு பார்வதி அப்ப ஆர்மி கேம்ப் மாதிரி கொண்டு போக போறீங்க அத சொல்லிட்டு போங்க என்கிறார். இதனால் கடுப்பான பிரவீன் ராஜ் வாய மூடிட்டு உட்காருங்க என்கிறார். அதற்கு பார்வதி சும்மாவே கேரக்டரில் இருப்ப இப்ப ஆர்மி கேம்ப் என்றதும் அப்படியே இருக்குறீயா. சும்மா வந்துட்டாரு என்று திட்டுகிறார். இதனுடன் இந்த ப்ரொமோ முடிவடைகிறது.
