Connect with us

சினிமா

மாமா, மருமகனுக்கு ஒன்றாக விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்.. திணறிய போயஸ் கார்டன்

Published

on

Loading

மாமா, மருமகனுக்கு ஒன்றாக விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்.. திணறிய போயஸ் கார்டன்

சமீப காலமாகவே  திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்  விடுக்கப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதன்படி முதல்வர் ஸ்டாலின்,  தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் , நாம் தமிழர் கட்சித் தமிழர்  சீமான்  மற்றும்  திரிஷா, ரஜினிகாந்த், இளையராஜா  ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள ரஜினிகாந்தின் வீட்டுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  இது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில்  சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு டி.ஜி.பி அலுவலக மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் நடிகர் ரஜினிகாந்த் சோதனை வேண்டாம் என கூறியதால் சோதனை நடத்தவில்லை எனவும், ஏனைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இதுபோல பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இப்படி தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கும் நபர்களை பிடிக்க முடியாமல் காவல்துறையினரும் திணறி வருகிறதாக பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டுவதோடு,  அவர்களை சட்டத்தின் முன்பு பிடித்து நிறுத்த வேண்டும் என்பதும் பொது மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன