தொழில்நுட்பம்
வீட்டிலே 130 இன்ச் சினிமா அனுபவம்: வெறும் ரூ.5,000-க்கு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்! முழு விபரம்!
வீட்டிலே 130 இன்ச் சினிமா அனுபவம்: வெறும் ரூ.5,000-க்கு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்! முழு விபரம்!
திரைப்படங்களை பெரிய திரையில் பார்க்க சினிமா தியேட்டர்தான் செல்ல வேண்டுமா? இனி தேவையில்லை. ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பிக்ஸாப்ளே 73 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் உங்க வீட்டையே ஓர் அதிநவீன திரையரங்காக மாற்றுகிறது. 4K தரத்தை ஆதரிக்கும் (Native 720p) இந்த ப்ரொஜெக்டர், வியக்க வைக்கும் அம்சங்களுடன் இந்திய சந்தையில் அடியெடுத்து வைத்துள்ளது.பிரமாண்ட காட்சி: இந்த ஸ்மார்ட் LED ப்ரொஜெக்டரை உட்புறம் அல்லது வெளிப்புறம் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இது அதிகபட்சமாக 330 செ.மீ (130 இன்ச் ) வரையிலான பிரமாண்ட திரையைக் காண்பிக்கும்.அதிவேக ஒளிர்வு: இதன் பிரகாசம் 3300 லூமன்ஸ் (Lumens) ஆகும். உயர் செயல்திறன் கொண்ட குவாட்-கோர் பிராசஸர் மூலம் இயக்கப்படும் இது, 4K வீடியோ தரத்தை ஆதரித்து, படங்களை மிகத் துடிப்பான தெளிவுடனும் துல்லியத்துடனும் காட்டுகிறது.30,000 மணிநேர ஆயுள்: இந்த ப்ரொஜெக்டரில் பொருத்தப்பட்டுள்ள LED விளக்கு 30,000 மணிநேரம் உழைக்கும் திறன் கொண்டது. இதனால், உங்க சினிமா அனுபவம் நீடித்த ஒன்றாக அமையும்.இது வெறும் ப்ரொஜெக்டர் மட்டுமல்ல, இது ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு சாதனம். நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற அனைத்துப் பிரபலமான ஓ.டி.டி. ஆஃப்களையும் இதில் நேரடியாக இயக்கலாம். இனி உங்க ஃபோன் தேவையில்லை.மிரரிங் திறன்: உங்க ஆண்ட்ராய்டு அல்லது iOS சாதனங்களில் உள்ள வீடியோக்களை பெரிய திரையில் பார்க்க, மிராகாஸ்ட் மற்றும் iOS ஸ்கிரீன் காஸ்டிங் வசதிகள் இதில் உள்ளன.டூயல்-பேண்ட் வைஃபை: 2.4GHz மற்றும் அதிவேக 5GHz ஆகிய 2 வைஃபை பட்டைகளிலும் இணைக்கும் வசதி இருப்பதால், வீடியோ ஸ்ட்ரீமிங் தடையின்றி இருக்கும்.சிறப்பம்சங்கள்:ப்ரொஜெக்டரை 200 டிகிரி வரை சாய்த்து அதன் கோணத்தை மிகத் துல்லியமாகச் சரிசெய்யலாம். இது பார்வைக் கோளாறுகளைத் தவிர்த்து, கழுத்து மற்றும் கண் அழுத்தத்தைக் குறைக்கிறது. ஒரே ஒரு பட்டனை அழுத்தி, திரையில் தெரியும் படம் நேராகவும், கூர்மையாகவும் இருக்குமாறு தானாகவே சரிசெய்து கொள்ளும். உள்ளமைக்கப்பட்ட 3W ஸ்பீக்கர் இருப்பதால், வெளிப்புற ஸ்பீக்கர்கள் இல்லாமலேயே சினிமா பார்ப்பதற்குத் தேவையான தரமான ஒலியைப் பெற முடியும். BT v5.4 புளூடூத், USB, AUX OUT மற்றும் HDMI போர்ட் எனப் பலதரப்பட்ட இணைப்புகளை ஆதரிக்கிறது.லேப்டாப், ஸ்மார்ட்போன், கேமிங் கன்சோல் எனப் பல சாதனங்களுடன் எளிதில் இணைக்கக்கூடிய இந்த 465 கிராம் எடை கொண்ட போர்ட்டபிள் (Portable) ப்ரொஜெக்டர், உங்க பொழுதுபோக்கு அனுபவத்தை முற்றிலும் புதிய தளத்திற்குக் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. அமேசானில் இதன் விலை ரூ.5,499 மட்டுமே.
