Connect with us

பொழுதுபோக்கு

இந்த வசனம் ‘க்ளோசப்ல’ பேசுங்க; எம்.ஜி.ஆரிடம் சொன்ன வசன கர்த்தா: ஒரு புத்தகம் பற்றி தேட தூண்டிய சம்பவம்!

Published

on

mgr

Loading

இந்த வசனம் ‘க்ளோசப்ல’ பேசுங்க; எம்.ஜி.ஆரிடம் சொன்ன வசன கர்த்தா: ஒரு புத்தகம் பற்றி தேட தூண்டிய சம்பவம்!

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை மக்கள் மத்தியில் தனக்கான இடத்தைப் பிடித்தவர் எம்.ஜி.ஆர். இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும்  தனக்கென தனி இடத்தை பிடித்தவர். இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என பன்முக திறமையுடன் வலம் வந்தார். கடந்த 1965-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ‘ஆயிரத்த்ல் ஒருவன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குநரான பி.ஆர். பந்துலுவிடம் உதவியாளராக பணியாற்றிய ஆர்.கே. சண்முகம் வசனம் எழுதியிருந்தார்.இப்படத்தின் மூலமே ஆர்.கே. சண்முகம்  வசனகர்த்தாவாக அறிமுகம் ஆனார். இப்படத்தில் எம்.ஜி.ஆர் பேசிய வசனங்கள் அனைத்தும் இன்றளவும் கூட ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் வகையில் அமைந்திருக்கும். இதைத் தொடர்ந்து,  ‘முகராசி’, ‘தனிப்பிறவி’, ‘ரகசிய போலீஸ் 115’, ‘ரிக்‌ஷாக்காரன்’, ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘ஊருக்கு உழைப்பவன்’ என பல்வேறு எம்.ஜி.ஆர் படங்களில் தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பை ஆர்.கே. சண்முகம் பெற்றார். அந்த அளவிற்கு இவரது வசனங்கள் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தன. இந்நிலையில், இவை அனைத்திற்கு தொடக்கமாக அமைந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு வசனத்தை ஆர்.கே.சண்முகம், எம்.ஜி.ஆரிடம் க்ளோசப்பில் பேச சொல்லியுள்ளார். அதாவது, ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பின் போது கதையாசிரியர் ஆர்.எஸ்.மனோகர், எம்.ஜி.ஆரிடம் தயங்கி…தயக்கி ஒரு காட்சியில் சொன்னாராம் இந்த காட்சியில் நீங்களும், வில்லனும் பேசும் பொழுது அந்த வசனத்தை மட்டும் க்ளோசப்பில் பேச வேண்டும் என்று சொன்னாராம். இதை கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர் இதை பற்றி எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் என்ன வசனம் அது என்று கேட்டுள்ளார். ஆர்.எஸ்.மனோகர் கேட்பார் என் அதிகாரத்தை பற்றி உனக்கு தெரியுமா என்று அதற்கு எம்.ஜி.ஆர் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா காலம் காலமாக நிற்பதற்கு இது தான் வசனம் இதை க்ளோசப்ல பேச வேண்டும் என்று சொல்லியுள்ளார். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் ரிலீஸான பின்னர் எம்.ஜி.ஆர், வசன கர்த்தாவிடம் ஏன் அப்படி சொன்னீர்கள் என்று கேட்டாராம். சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. அதை எழுதியது இளங்கோவடிகள். நீங்கள் ஒரே வார்த்தையில் சிலப்பதிகாரம் என்று சொன்னால் எத்தனை கோடி தமிழர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோடி பேருக்கும் அது போய் சேரும் என்று கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன