Connect with us

சினிமா

என்னோட எலிமினேஷன் தவறு; நடிப்புனா பாரு, விஷம்னா கம்மு.. எல்லாத்தையும் புட்டு வைத்த ஆதிரை

Published

on

Loading

என்னோட எலிமினேஷன் தவறு; நடிப்புனா பாரு, விஷம்னா கம்மு.. எல்லாத்தையும் புட்டு வைத்த ஆதிரை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் கலந்து கொண்ட ஆதிரை  மூன்றாவது வாரமே எலிமினேட் ஆனார்.  ஆரம்பத்தில் இவர் போல்ட் ஆன  போட்டியாளராக ரசிகர்கள் மத்தியில்  இடம்பிடித்த போதும், நாளடைவில்  காதலில் சிக்கி இறுதியில்  வெளியேறினார். இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9-இல் இருந்து வெளியேறிய ஆதிரையை ஜாக்லின் பேட்டி எடுத்துள்ளார். அதில் அவர் பல விஷயங்களை மனம் திறந்து கூறியுள்ளார்.அதன்படி, அவர் கூறியது, என்னுடைய எலிமினேஷன் மக்களின் தவறு. என்னை விட தகுதியில் குறைவானவர்கள் உள்ளே உள்ளார்கள். கலையரசன் தான் எலிமினேட் ஆவார் என்று நினைத்தேன். அவர் எந்த டாஸ்க்கும் ஒழுங்காக விளையாடவில்லை. இப்போ தான் அவருக்கு இந்த கேம் பற்றி சிறிது தெளிவு ஏற்பட்டுள்ளது.அதேபோல கம்ரூதின் திறமையற்றவர் என்று தான் சொல்ல வேண்டும். அவர் எல்லோருடனும் சண்டை, சச்சரவுகளை ஏற்படுத்திக் கொண்டார். எனக்கு அவரை இரண்டு ஆண்டுகளாகப் தெரியும். அவர்கள் எல்லாம் உள்ளபோது என்னை மக்கள் எலிமினேட் செய்தது தவறு.பின்பு, ஜாக்லின் அவரிடம் ‘நடிப்பு, விஷம், நாட்டாமை, அன்பு’ என்றால் யாரை சொல்வீர்கள் என்று கேட்டார். ‘நடிப்பு என்றால் காலையில் இருந்து மாலையில் மட்டும் தனது ஆட்டத்தை காட்டி, பிறகு எல்லோருடனும் சகஜமாக பேசுவார் பார்வதி. அதனால் அவர் கட்டாயம் நடிக்கிறார், இதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்,’ என்றார் ஆதிரை. ‘விஷம் என்றால் கம்ரூதின் தான், நாட்டாமை என்றால் சபரி, அன்பு என்றால் கனி அக்கா தான். டாஸ்கிலும், சக போட்டியாளர்களிடம் உண்மையான அன்பு கொண்டவர்,’ என்று கூறினார்.மேலும், டைட்டிலை வெல்லக்கூடிய ஐந்து பேரை சொல்லச் சொன்ன போது, அவர் முதலில் FJ என்று சொன்னார். ‘நான் இந்த பெயரை விட்டுவிட்டு சொல்ல வேண்டும், நீங்க நிச்சயம் FJ பெயரை சொல்வீங்க என்று எல்லோருக்கும் தெரியும்,’ என்று ஜாக்லின் சொன்னார்.இதை தொடர்ந்து, ‘கனி, சபரி, கெமி மற்றும் சுபி ஆகியோர் இறுதி டைட்டிலை வெற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு’ என்றார். அந்த நேரத்தில், நீங்க எத்தனை ஆண்டு காலமாக பிக் பாஸ்-க்கு டிரை செய்தீர்கள்?’ என கேட்ட போது ‘மூன்று, நான்கு ஆண்டு காலமாக டிரை செய்தேன்,’ என்றார் ஆதிரை.’இவ்வளவு வருடங்களாக நீங்க கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தீர்கள், ஆனால் இந்த சான்ஸ் மிஸ்ஸாகிவிட்டதே,’ என்று கேட்டபோது, ‘நான் பிரபலத்திற்காக எதுவும் செய்யவில்லை. நான் நானாக இருந்தேன். நடிக்கவில்லை. இரண்டாவது வாரத்தில் நான் சரிந்தது எனக்கு தெரியும். ஆனால் மூன்றாவது வாரத்தில் இருந்து மீண்டும் எனது ஆட்டத்தை விளையாடினேன். ஆனாலும் மக்கள் என்னை எலிமினேட் செய்து விட்டார்கள்,’ என்றார் ஆதிரை. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன